ஒருவரின் அழகை அதிகரித்து வெளிப்படுத்துவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது. பலர் முடியானது பெண்களுக்கு தான் அழகை வழங்குகிறது என்று சொல்கின்றனர். ஆனால் ஆண்களின் அழகை வெளிப்படுத்துவதிலும் முடி முதன்மையாக உள்ளது. அதிலும் நல்ல ஆரோக்கியமான மற்றும் பொலிவான முடி, ஒருவரின் உடல் ஆரோக்கியத்தையும், நடத்தையையும் சொல்லும். ஆகவே அத்தகைய முடியை நன்கு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, உண்ணும் உணவில் கவனத்தை செலுத்த வேண்டும்.


குறிப்பாக முடிக்கு தேவையான சத்துக்கள் என்னவென்று தெரிந்து கொண்டு, அந்த சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். முடிக்கு தேவையான சத்துக்கள் என்றால் அது புரோட்டீன் மற்றும் இரும்புச்சத்து தான். இவை மயிர்கால்களை வலுவுடன வைத்துக் கொள்வதுடன், ஸ்கால்ப்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

ஆகவே இத்தகைய சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை தினமும் தவறாமல் உணவில் சேர்த்து வர வேண்டும். அதுவும் இந்த உணவுகளை தொடர்ந்து ஆறு மாதம் உணவில் சேர்த்து வந்தால், நல்ல மாற்றம் தெரியும்.  முடியை பொலிவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும் உணவுப் பொருட்களைப் பட்டியலிடப்பட்டுள்ளது. இதனை ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

முட்டை

எத்தனை முறை நீங்கள் முட்டையைப் பற்றி பல செய்திகளைப் படித்திருந்தாலும், முடிக்கு ஆரோக்கியத்தை வழங்கும் உணவுப் பொருட்களில் சிறந்தது முட்டை தான். எனவே தினமும் முட்டையை சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான முடியை மட்டுமின்றி, உடலையும் பெறலாம்.

வேர்க்கடலை

வேர்க்கடலையில் பயோடின் என்ற முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் மற்றும் ஸ்கால்ப்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் பொருள் அதிகம் உள்ளது. ஆகவே வேர்க்கடலையையும் தினமும் ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. Show Thumbnail

வாழைப்பழம்

வாழைப்பழம் சாப்பிட்டால் சிலிகா என்னும் கனிமச்சத்து அதிகம் உள்ளதால், இதனை தினமும் உட்கொண்டு வர, முடி நன்கு அடர்த்தியாகவும், வலுவுடனும் வளரும்.

உலர் திராட்சை

உலர் திராட்சையில் கூட சிலிகா அதிகம் உள்ளது. மேலும் இரும்புச்சத்தும் உள்ளது. ஆகவே இதனையும் உணவில் சேர்த்து வாருங்கள்.

கீரைகள்

கீரைகளில் இரும்புச்சத்துடன், வைட்டமின் சி மற்றும் ஏ உள்ளது. இவை முடியை ஆரோக்கியமாகவும், புத்துணர்வுடனும் வைத்துக் கொள்ள தேவையான சத்துக்கள். ஆகவே இதனை வாரத்திற்கு 3-4 முறை உணவில் சேர்த்து வர வேண்டும்.

சால்மன்

சால்மன் மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டுடன், வைட்டமின் பி12 மற்றும் இரும்புச்சத்து உள்ளது. இவை ஸ்கால்ப்பை வறட்சியின்றி, எப்போதும் ஈரப்பசையுடன் வைத்துக் கொள்ளும். இதனால் பொடுகு வருவது தடுக்கப்பட்டு, முடி உதிர்வது குறையும்.

பருப்பு வகைகள்

பருப்புக்களில் புரோட்டீன் மற்றும் கனிமச்சத்துக்களில் ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் பயோட்ன் அதிக அளவில் நிறைந்துள்ளன. இவை முடியின் வளர்ச்சியை தூண்டக்கூடியவை.,

பாதாம்

பாதாமில் பயோட்டின் என்னும் முடிக்கு தேவையான அத்தியாவசிய சத்து நிறைந்துள்ளது. ஆகவே நல்ல ஆரோக்கியமான முடி வேண்டுமானால், பாதாமை சாப்பிட்டு வாருங்கள்.

கடல் சிப்பி

கடல் சிப்பியில் தான் ஜிங்க் எண்ணற்ற அளவில் நிறைந்திருப்பதுடன், புரோட்டினும் உள்ளது. எனவே முடி உதிர்ரும் பிரச்சனை மற்றும் ஸ்கால்ப்பில் பிரச்சனை உள்ளவர்கள், கடல் சிப்பியை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து வந்தால், முடிக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கலாம்.

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரியில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், இதனை உட்கொண்டு வர, தலை முதல் கால் வரை இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் மயிர்கால்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படும்.

எண்ணெய்கள் 

ஆலிவ் மற்றும் கடலை எண்ணெய்களைக் கொண்டு முடியை மசாஜ் செய்வது மட்டுமின்றி, அதனைப் பயன்படுத்தி சமையல் செய்து வந்தால், முடி மட்டுமல்லாமல், உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள பீட்டா கரோட்டின் உடலில் செல்லும் போது வைட்டமின் ஏ ஆக மாறுவதால், இதனை உட்கொண்டு வர, முடி மற்றும் ஸ்கால்ப் வறட்சி அடையாமல் இருக்கும்.

வால்நட்ஸ்

வால்நட்ஸில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. இந்த கனிமச்சத்து குறைவாக இருந்தால் தால், முடியானது பல பிரச்சனைகளை சந்திக்கும் எனவே இதனை அவ்வப்போது சாப்பிட்டு வாருங்கள்.

கேரட்

கேரட் கண்களுக்கு மட்டுமல்லாமல், முடிக்கும் நல்லது. ஏனெனில் இதிலும் பீட்டா கரோட்டின் வளமாக உள்ளது. எனவே தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வாருங்கள்.

சிக்கன்

சிக்கனிலும் புரோட்டீன் மற்றும் ஜிங்க் சத்து அதிக அளவில் உள்ளது. ஆகவே உணவில் சிக்கனையும் அதிகம் சேர்த்து, நல்ல அழகான கூந்தலைப் பெறுங்கள்.
Powered by Blogger.