உங்கள் முகம், அழகாக, சிகப்பாக பளபளப்பாக இருக்க சில ஆலோசனைகள்
* எண்ணெய் முகம் உள்ளவர்கள் தக்காளி ஜூசை தொடர்ந்து தடவி வரலாம். இதிலுள்ள வைட்டமின் ஏ, பி, சி மூன்றும் சருமத்தை இளமை யாக வைத்திருக்கும்.
*எல்லா காய்கறிகளையும் சேர்த்து சூப் செய்யும்போது, அதிலிருந்து வெளியேறும் ஆவியில் முகத்தை காட்டினால், சருமத் துவாரங்கள் திறந்து அழுக்கு வெளியேறும். தேவையான சத்துகளும் சேரு ம்.
* சருமத்தை சுத்தமாக்குவதில் பால் சார்ந்த பொருட்கள் மிகச் சிறப் பாகச் செயல்படுகின்றன. தயிர், வெண் ணெய் போன்றவற் றையும், சாதம் வடித்த கஞ்சியுடன் பாலையும் சேர்த்து முகத்தில் தடவினால் தளர்ந்த சருமம் இறுக்க மாகும்.
* பாதாம் பருப்பு விழுதை வாரம் ஒருமு றை முகத்தில் அப்ளை செய்து வந்தால், சொர சொரப்பான சருமம் சாப்ட்டாகும். இந்த பேக் முகத்தில் உள்ள ஈரப்பசையை யும் தக்க வைக்கும்.
*பப்பாளி பழத்துடன் பால் கலந்து முகத்தி ல் பூசிவந்தால், நிறம் கூடுதலாகும். நார் மலான சீதோஷ்ண நிலையிலேயே இதை செய்ய வேண்டும்.
மேலும் சில முறைகள்
அனைவருக்குமே அழகாகவும், வெள் ளையாகவும், முகம் பளபளப் பாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை உண் டு.
இதற்காக கடைகளில் விற்கும் நிறைய அழகுப் பொருட்களை வாங் கிப் பயன்படுத்துவார்கள். ஆனால் எந்த பலனும் இருக்காது.
இதற்கு ஒருசில இயற்கையான முறைகளை பின்பற்றினாலே அழகாக மாறலாம்.
முகத்தை கழுவுதல்
முகத்தில் தூசிகள் படிந்திருப்பதா ல் முகம் பொலிவின்றி காணப் படும்.
எனவே அவ்வப்போது முகத்தை சுத்தமான நீரினால் கழுவினால், முகம் நன்கு சுத்தமாக பருக்களி ன்றி இருக்கும்.
ஃபேஸ் பேக்
முகத்தில் உள்ள கருமையைப் போக்குவதற்கு நிறைய ஃபேஸ் மாஸ்க்குகள் உள்ளன. அத்தகைய மாஸ்க்குகள், ஸ்கரப்கள் போன்றவற்றை மேற்கொண்டால், சருமத்தி ல் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்கு கள் நீங்கி, சருமத்தின் நிறம் இயற்கை யாகவே அதிகரிக்கும்.
எலுமிச்சை
எலுமிச்சை ஒரு சூப்பரான ப்ளீச்சிங் பொரு ள். இத்தகைய எலுமிச்சையின் துண்டுகள் அல் லது சாற்றைக் கொண்டு, தினமும் முகத் தை சிறிது நேரம் தேய்த்து கழுவினால், சருமத் தில் உள்ள அழுக்குகள் நீங்கி, சருமம் பொலி வோடு மின்னும்.
பழங்கள்
பழங்களில் வாழைப்பழம், பப்பாளி, அவகேடோ போன்றவை சருமத்திற்கு பொலிவைத் தரக்கூடிய வை.
எனவே இத்தகைய பழங்களை சாப்பி டுவதோடு சருமத்திற்கு தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சூரியக் கதிர்களின் தாக்கம்
சூரியனிடமிருந்து வரும் புறஊதாக்கதிர்களால் சருமத்திற்கு கடுமையான பாதிப்பானது ஏற்படுவதோடு, சருமத்தின் நிறமும் மாறும்.
எனவே சருமம் வெள்ளையாகவும், நிறம் மாறாமலும் இருப்பதற்கு வெயிலில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்க்கவும்.
அப்படியே வெயிலில் சுற்றினால் சருமத்தி ற்கு சன் ஸ்கிரீன் லோசனை தடவி செல்ல வேண்டும்.
குறிப்பாக வீட்டிற்கு வந்ததும் சருமத்தை சுத்தமான நீரினால் கழுவிட வேண்டும்.
தயிர் மசாஜ்
தயிர் முகத்தை வெள்ளையாக்க உதவும் அழகுப் பொருட்களில் ஒன்று. எனவே அதனைக் கொண்டு தினமும் முகத்திற்கு மசாஜ் செய்து கழுவினால், 7 நாட்களில் ஒரு நல்ல முகப்பொலிவு கிடைக்கும்.
கிளின்சிங்
கற்றாழை ஒரு சிறந்த கிளின்சிங் பொருள். எனவே கற்றாழையின் ஜெல்லை முகத்திற்கு தடவி மசாஜ் செய்து, காய வைத்து கழுவினால், முகத்தில் உள்ள அழுக்குகள் அனை த்து நீங்கி, முகம் பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் காணப் படும்.
தண்ணீர் குடிக்கவும்
தினமும் அதிகப்படியான தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுக் கள் அனைத்தும் வெளியேறி சருமம் மின்ன ஆரம்பிக்கும்.
உடற்பயிற்சி
முகத்தில் ஒரு நல்ல பொலிவு வரவேண்டு மெனில் மேற்கூறியவற்றுடன் தினமும் கா லையில் எழுந்து லேசான உடற்பயிற்சிக ளை தவறாமல் மேற்கொண்டால், உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, முகத்தில் உள்ள சோர்வு நீங்கி, இயற்கையாகவே முகம் அழகாக இருக்கும்.