பழங்கள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. இத்தகைய பழங்கள் உடலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் மிகவும் சிறப்பானது. எப்படியெனில் பழங்கள் சாப்பிட மட்டும் பயன்படுவதில்லை, சருமத்தை பராமரிக்கவும் பயன்படுகிறது. அதிலும் ஃபேஸ் பேக், ஸ்கரப், டோனர் அல்லது கிளின்சர் என்றெல்லாம் பயன்படுகிறது.
இதுவரை நாம் எத்தனையோ பழங்களை சாப்பிட்டு, அதன் நன்மைகளை பெற்றிருப்போம். ஆனால் ஒருசில பழங்களை பெரும்பாலும் சாப்பிட மட்டுமின்றி, ஃபேஷியல் செய்யவும் பயன்படுத்துவோம். அதிலும் கோடைகாலம் என்பதால், நமது சருமம் அதிக வெப்பத்துடன் இருக்கும். ஆகவே அத்தகைய சருமத்தை குளிர்ச்சியடைச் செய்ய எத்தனையோ வழிகள் இருப்பினும், பழங்களை வைத்து செய்யப்படும் ஃபேஷியல் போன்று எதுவும் வராது.

மேலும் பழங்களில் அனைத்து பழங்களை வைத்தும் ஃபேஷியல் செய்ய முடியாது. ஏனெனில் சில பழங்கள் சருமத்திற்கு சரியாக இருக்காது. சரி, இப்போது எந்த பழங்களையெல்லாம் வைத்து ஃபேஷியல் செய்யலாம் என்று சில பழங்களையும், அதன் தன்மைகளையும் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அந்த பழங்களைப் பயன்படுத்தி சருமத்தை பராமரியுங்கள்...

வாழைப்பழ ஃபேஷியல்

வாழைப்பழத்தை வைத்து ஃபேஷியல் செய்தால், அவை பாதிப்படைந்த சரும செல்களை சரிசெய்யவும், முகப்பருக்களைப் போக்கவும், சருமத்தை இறுக்கமடையச் செய்யவும் பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு வாழைப்பழத்தை நன்கு மசித்து, அத்துடன் தயிர் மற்றும் சிறிது தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு ஃபேஷியல் செய்ய வேண்டும்.

மாம்பழ ஃபேஷியல்

மாம்பழ சீசன் என்பதால், மாம்பழத்தை வைத்து ஃபேஷியல் செய்தால், சருமப் பிரச்சனைகளான முதுமைத் தோற்றம் மற்றும் கரும்புள்ளிகள் போன்றவை நீங்கும். அதிலும் மாம்பழத்தை மசித்து, அதில் சிறிது பால் சேர்த்து கலந்து, ஃபேஷியல் செய்தால், சருமம் இறுக்கமடைந்து, வறட்சி நீங்கி, முகம் பொலிவோடு இருக்கும்.

ஸ்ட்ராபெர்ரி ஃபேஷியல்

முகப்பருக்களை நீக்குவதற்கு ஸ்ட்ராபெர்ரி பெரிதும் துணையாக இருக்கும். ஆகவே முகப்பருக்களை நீக்க நினைப்போர், ஸ்ட்ராபெர்ரியை தயிருடன் சேர்த்து கலந்து, வராத்திற்கு இரண்டு முறை ஃபேஷியல் செய்து வந்தால், பருக்களை நீக்கிவிடலாம்.

ஆப்பிள் ஃபேஷியல்

பழுப்பு நிற சருமம் மற்றும் பருக்கள் இருந்தால், அதனை சரிசெய்ய ஆப்பிள் ஃபேஷியல் சிறந்ததாக இருக்கும். அதிலும் ஆப்பிளை அரைத்து, அதோடு தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஃபேஷியல் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

அவகேடோ ஃபேஷியல்

அவகேடோ சருமத்திற்கு மட்டும் சிறந்தது அல்ல, கூந்தலுக்கும் தான். எனவே அத்தகைய அவகேடோ பழத்தை தேன், முட்டை அல்லது தயிருடன் சேர்த்து கலந்து, மசாஜ் செய்து வர, சருமத்தை பொலிவோடு, அழகாக வைத்துக் கொள்ளலாம்.

ஆரஞ்சு ஃபேஷியல்

சிட்ரஸ் பழங்களில் ஆரஞ்சு பழத்தை வைத்து, ஃபேஷியல் செய்தால், வறட்சியில்லாத சருமத்தையும், இளமையான தோற்றத்தையும் பெறலாம்.

எலுமிச்சை ஃபேஷியல்

எலுமிச்சை அழகுப் பராமரிப்பில் பயன்படும் பொருட்களில் முக்கியமான ஒன்று. அதிலும் எலுமிச்சை ஒரு சரியான கிளின்சிங் பொருள். இதனை வைத்து முகத்திற்கு ஃபேஷியல் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, பொலிவான சருமத்தைப் பெற முடியும்.

பப்பாளி ஃபேஷியல்

கோடைகாலம் என்பதால், சருமத்தின் நிறமானது பழுப்பு நிறமாகவும், ஆங்காங்கு பருக்களும் இருக்கும். இவை ஏற்படுவதற்கு சருமத்தில் அதிகப்படியான வெப்பம் இருப்பதே ஆகும். எனவே சருமத்தை குளிர்ச்சியடையச் செய்து, சருமப் பிரச்சனைகளைப் போக்குவதில் பப்பாளி முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆகவே அதற்கு பப்பாளி வைத்து ஃபேஷியல் செய்வது சிறந்ததாக இருக்கும்.

பீச் ஃபேஷியல்

சருமத்தை பராமரிப்பதில் பீச் பழம் சிறந்த ஒன்றாக இருக்கும். ஏனெனில் பீச் பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகம் உள்ளதால், அதனை வைத்து ஃபேஷியல் செய்தால், சரும சுருக்கங்கள் நீங்குவதோடு, சருமத்துளைகளில் உள்ள அடைப்புக்கள் நீங்கி சுத்தமாகவும், முகம் பொலிவோடும் இருக்கும். அதற்கு பீச் பழத்தை தேனுடன் சேர்த்து கலந்து, ஃபேஷியல் போட வேண்டும்
Powered by Blogger.