எந்த ஒரு பக்கவிளைவையும் விளைவிக்காத சில ஆயுர்வேத ஃபேஸ் பேக்குளை பயன்படுத்தி முகப்பருவைப் போக்குவதோடு, சருமத்தின் அழகை பராமரிக்கும் முறைகளை பார்க்கலாம்...

- முகப்பருவால் பாதிக்கப்பட்டவர்கள் மஞ்சள் தூளுடன், கடலை மாவு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து தடவி வந்தால் முகம் பொலிவடைவதோடு, முகப்பருவும் படிப்படியாக மறைவதை காணலாம்.



பெரும்பாலான இளம் வயது பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் முகப்பரு. முகப்பரு பிரச்சனையால், சில பெண்கள் தன்னம்பிக்கையை இழந்து, வெளியே தைரியமாக நடக்க முடியாமல் இருக்கின்றனர். ஏனெனில் முகப்பருக்கள் முகத்தில் அதிகமாக இருந்தால், பார்ப்பவர்கள் ஒரு மாதிரியாக எண்ணுவார்கள்.

- சாமந்திப் பூவில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-செப்டிக் பொருள் அதிகம் இருப்பதால், அது முகப்பருவை எளிதில் போக்கும். முகப்பருவினால் பாதிக்கப்பட்டவர்கள், சாமந்திப் பூவினை அரைத்து, தேன் மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் அலசினால் நல்ல பலன் கிடைக்கும்.

- வேப்பிலையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் அதிகம் உள்ளது. வேப்பிலையை அரைத்து, அதில் சிறிது மஞ்சள் மற்றும் 3-4 துளிகள் வேப்பிலை எண்ணெயை ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி காய வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

- புதினா இலைகளை எடுத்து, அதனை அரைத்து, அதன் சாற்றினை முகத்தில் தினமும் இரண்டு முறை தடவி ஊற வைத்து கழுவினால், பருக்கள் படிப்படியாக குறைந்துவிடும்
Powered by Blogger.