ப்ளீச்சிங் செய்வதன் மூலம், உடனடியாக நல்ல நிறத்தைப் பெற முடியும். ஏனெனில் சருமமானது பொலிவிழந்து, கருமையாக காணப்படுவதற்கு முக்கிய காரணம் சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் தான். ஆனால் அத்தகைய அழுக்குகளையும், இறந்த செல்களையும் ப்ளீச்சிங் செய்வதால் உடனே போக்கலாம். பொதுவாக இத்தகைய ப்ளீச்சிங்கானது அழகு நிலையங்களுக்கு சென்று தான் செய்வோம். ஆனால் அப்படி அதிக பணம் செலவழித்து அழகு நிலையங்களில் செய்வதற்கு பதிலாக, வீட்டிலேயே எளிமையான முறையில் ப்ளீச்சிங் செய்யலாம். அதற்கு எப்படி ப்ளீச்சிங் செய்வது என்று தெரிந்து கொண்டால் போதும்.


படி: 1 

முதலில் முடியை நன்கு தூக்கி கட்டிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், ப்ளீச்சிங் செய்யும் போது முடியானது முகத்தில் படும் போது, அதன் நிறம் மாறிவிடும். ஆகவே ப்ளீச்சிங் செய்யும் முன், முடியானது முகத்தில் படாதவாறு நன்கு இறுக்கமாக, கீழே விழாதவாறு கட்டிக் கொள்ள வேண்டும்.

படி: 2 

ப்ளீச்சிங் செய்யும் முன் க்ளின்சிங் செய்ய வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கிவிடும். அதுமட்டுமின்றி, க்ளிச்சிங் செய்வதால், முகத்தில் மேக் அப் போட்டிருந்தால், அதுவும் நீங்கிவிடும். ஆகவே பால் அல்லது க்ளின்சரை பஞ்சு கொண்டு துடைத்து எடுக்க வேண்டும்.

படி: 3 

ஒரு பௌலில் 1 ஸ்பூன் முகத்திற்கான ப்ளீச் க்ரீம் மற்றும் 1/4 ஸ்பூன் ஆக்டிவேட்டர் பவுடரை போட்டுக் கொள்ள வேண்டும். ஒருவேளை அந்த ப்ளீச் செட்டுடன் ஆக்டிவேட்டர் பவுடர் இல்லாவிட்டால், அந்த ப்ளீச்சிலேயே ஆக்டிவேட்டர் பவுடர் உள்ளது என்று அர்த்தம்.

படி: 4

பின் அதனை நன்கு கட்டி இல்லாதவாறு கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும். முக்கியமாக கண்களுக்கு மேல் மற்றும் புருவத்தில் படாதவாறு தடவ வேண்டும்.

படி: 5 

அடுத்து இரண்டு காட்டன் துண்டுகளை எடுத்து ரோஸ் வாட்டரில் நனைத்து, கண்களின் மேல் வைத்து, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

படி: 6

பின்னர் சுத்தமான காட்டனை நீரில் நனைத்து, அதனைக் கொண்டு முகத்தில் உள்ளதை சுத்தமாக துடைத்து எடுத்து விட்டு, நாப்கின் கொண்டு முகத்தை லேசாக துடைத்து உலர வைக்க வேண்டும்.

படி: 7

இறுதியில் பழங்களைக் கொண்டு முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு, 10 நிமிடம் ஊற வைத்து, நீரில் நனைத்த காட்டன் கொண்டு துடைத்து எடுக்க வேண்டும்.

குறிப்பு 

மேற்கூறியவாறெல்லாம் செய்து வந்தால், சருமத்தில் உள்ள நச்சுக்கள் நீங்கி, சருமம் நல்ல நிறத்துடன் காணப்படும். முக்கியமாக, இதனை செய்த பின்னர் சூரிய கதிர்கள் சருமத்தின் மீது படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதேப் போல், 8-10 மணிநேரத்திற்கு சருமத்தை சோப்பு அல்லது ஃபேஸ் வாஷ் கொண்டு கழுவக் கூடாது.
Powered by Blogger.